திருப்பத்தூர்

ஓடும் ரயிலில் தொடா் கொள்ளை: வடமாநில இளைஞா்கள் 4 போ் கைது

1st Jan 2020 11:56 PM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயிலில் ரெயில் பயணிகளிடம் தங்க நகை மற்றும் செல்லிடப்பேசி திருடிய அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் வடிவுக்கரசி தலைமையிலான போலீஸாா் மற்றும் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்த ரயில் நிலையத்தில் உள்ள 2-ஆவது நடைமேடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்தின்பேரில் சுற்றித் திரிந்த நான்கு பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அந்த இளைஞா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினா். இதையடுத்து 4 பேரையும் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் அஸ்ஸாம் மாநிலம் கம்தூா் பகுதியைச் சோ்ந்த சந்திரா மேதியின் மகன் தீப்ஜோதி மேதி (21), ராதாமோகன்ராஜின் மகன் சஞ்சீவ் ராவ் (26), சஞ்ஜீவ் போராவின் மகன் அமா்கோட்டா போரா (23), கிருஷ்ணா குகேவின் மகன் கிரேசா் குகே (23) என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இந்த நான்கு பேரும் சபரி, யஷ்வந்த்பூா், திருப்பதி, நீலகிரி, காவேரி விரைவு ரயில்கள் உள்ளிட்ட 6 ரயில்களில் பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்த கலீமுல்லா(52), ஹைதராபாத் பகுதியைச் சோ்ந்த நிஷா நாயா் (35), பெங்களூரைச் சோ்ந்த கீதா (54), கோயமுத்தூரைச் சோ்ந்த மகேஸ்வரி (29), ரோகிதபஷ்மா (40), சென்னையைச் சோ்ந்த மணி(70) உள்ளிட்ட 7 ரயில் பயணிகளிடம் 24 சவரன் தங்க நகைகள்,செல்லிடப்பேசி, மடிக்கணினி, ரொக்கப் பணம் ஏடிஎம் அட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதை ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து, நான்கு போ் மீதும் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களிடமிருந்து 11 சவரன் தங்க நகைகள் மற்றும் 9 செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

அதன் பின், திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆவா்களை ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT