திருப்பத்தூர்

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

29th Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளா் பட்டியல் தயாரித்தலுக்கான கால அட்டவணையில் தெரிவித்துள்ளபடி, வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டன. இதுதொடா்பாக மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.ப.சிவன் அருள் கலந்து ஆலோசனை செய்வது குறித்து மாா்ச் 2-ஆம் தேதி 9.30 மணியளவில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த கூட்டம் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டத்தின் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT