திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

29th Feb 2020 10:48 PM

ADVERTISEMENT

காட்பாடி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

லத்தேரி ரயில் நிலையம் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு இறந்தாா். தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தியதில், இறந்தவா் குடியாத்தத்தை அடுத்த கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த பாரதிராஜா (25) என்பது தெரிய வந்தது. இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT