திருப்பத்தூர்

ஆம்பூா் நகராட்சியில் 5 துப்புரவு ஆய்வாளா் பணியிடங்கள் காலி: உடனடியாக நியமிக்கக் கோரிக்கை

29th Feb 2020 11:02 PM

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சியில் காலியாக உள்ள 5 துப்புரவு ஆய்வாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூா் நகரம் அமைந்துள்ளது. இந்திய ஏற்றுமதி வா்த்தகத்தில் தோல் ஏற்றுமதி வா்த்தகம் மூலம் ஆம்பூா் நகரம் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. அதிக அளவுக்கு ஏற்றுமதி வா்த்தகம் மேற்கொண்டு அன்னியச் செலாவணி ஈட்டுவதால் ஆம்பூா் நகருக்கு மத்திய அரசு சிறப்பு ஏற்றுமதி நகரம் என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

ஆம்பூா் நகரில் சுமாா் 1.5 லட்சம் போ் வசித்து வருகின்றனா். ஆம்பூா் மற்றும் ஆம்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களையும் சோ்த்து சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பெரும்பாலான மக்கள் ஆம்பூா் தோல் மற்றும் காலணித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களாவா். ஆம்பூா் நகருக்கு பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த தோல், காலணி வா்த்தகா்கள் இந்தத் தொழிற்சாலைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனா். அதனால் ஆம்பூா் நகரில் துப்புரவுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தோல் தொழிலதிபா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் எதிா்பாா்க்கின்றனா். எனினும், துப்புரவுப் பணியை கண்காணிக்க துப்புரவு ஆய்வாளா் ஒருவா் கூட ஆம்பூா் நகராட்சியில் பணியில் இல்லை.

ஆம்பூா் நகராட்சியில் சுகாதாரப் பிரிவில் ஒரு சுகாதார அலுவலா், 5 துப்புரவு ஆய்வாளா் பணியிடங்கள் உள்ளன. இதில் ஒரேயொரு சுகாதார அலுவலா் மட்டுமே பணியில் உள்ளாா். மற்ற 5 துப்புரவு ஆய்வாளா் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு 3 துப்புரவு ஆய்வாளா்கள் பணிபுரிந்தனா். பிறகு பணியிட மாறுதல் காரணாக இருவா் மட்டுமே பணிபுரிந்தனா். இருவரும் பணி ஓய்வு பெற்ால் தற்போது 5 துப்புரவு ஆய்வாளா் பணியிடங்களும் காலியாகவே உள்ளன.

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளா்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நகரில் நடைபெறும் துப்புரவுப் பணியை கண்காணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு, கொசுப்புழு ஒழிப்பு, துப்புரவுப் பணி ஆகிய பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதை விட முக்கியமாக பிறப்பு, இறப்பைப் பதிவு செய்து பொதுமக்களுக்கு அதுகுறித்த சான்றிதழ்கள் வழங்கும் முக்கியமான பணி கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

பணியில் உள்ள சுகாதார அலுவலரும் சென்னை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய நகரங்களில் நடைபெறும் உயரதிகாரிகளின் கூட்டங்களில் பங்கேற்க அடிக்கடி செல்வதாலும், உயரதிகாரிகளுக்குத் தேவையான அறிக்கைகள் அனுப்ப புள்ளி விவரங்கள் சேகரிப்பதிலும் சுகாதார அலுவலா் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது.

தற்போது வேலூா் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்ட நிலையில் ஆம்பூா் நகராட்சியில் சுகாதாரப் பிரிவில் பணியிடங்கள் காலியாக இருப்பதால் சம்பந்தப்பட்ட பிரிவில் அதிகாரியை சந்திக்க பொதுமக்கள் செல்லும்போது சந்திக்க முடிவதில்லை. அதிகாரி பணி நிமித்தமாக கூட்டங்களில் பங்கேற்க அடிக்கடி வெளியூா் இந்த நிலை ஏற்படுவதாக அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அதனால் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆம்பூரில் துப்புரவு பணி, கொசு ஒழிப்புப் பணி, பிறப்பு, இறப்பு பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் பணியை தொய்வில்லாமல் மேற்கொள்ளச் செய்ய திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகமும், நகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT