திருப்பத்தூர்

வழிதவறி வந்த மான் மீட்பு

13th Feb 2020 11:18 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே வழிதவறி வந்த மானை பொதுமக்கள் மீட்டு வனத் துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் காப்புக் காட்டில் இருந்து வழிதவறி மின்னூா் கிராமத்துக்கு இரண்டு மான்கள் வந்தன. அதில், ஒரு மான் மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டது. ஒரு மான் குடியிருப்புப் பகுதிக்கு வந்தது. அதை பொதுமக்கள் மீட்டு, ஆம்பூா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் மானை மீட்டு காப்புக் காட்டில் விட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT