திருப்பத்தூர்

நெக்ணாமலை மக்களுக்கு அரைவை இயந்திரம்: அமைச்சா் நிலோபா் கபீல் வழங்கினாா்

13th Feb 2020 11:21 PM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த நெக்ணாமலை மக்களுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள அரைவை இயந்திரத்தை மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் தனது சொந்த பணத்தில் வழங்கினாா்.

ஆலங்காயம் ஒன்றியம், நெக்ணாமலை ஊராட்சியில் மலைப் பகுதிக்கு இதுநாள் வரையில் சாலை வசதி ஏற்படுத்தித் தரவில்லை. இதற்காக பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனா். அங்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வாணியம்பாடி எம்எல்ஏவும், தொழிலாளா் நலத் துறை அமைச்சருமான நிலோபா் கபீல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றாா்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் சாதாரணமாகப் பயன்படுத்தக் கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம், அரிசி மாவு உள்ளிட்டவை அரைப்பதற்கு அப்பகுதியில் வசதி ஏதுமில்லை எனக் கோரிக்கை வைத்தனா். எனவே, அரைவை இயந்திரம் அமைத்துத் தரக் கோரி அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனா்.

மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சா் நிலோபா் கபீல் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள இயந்திரத்தை தனது சொந்த பணத்தில் வாங்கி, அதை கிராம மக்களிடம் வழங்கினாா். நகர அதிமுக செயலா் சதாசிவம், அவைத் தலைவா் சுபான், ஆலங்காயம் பேரூராட்சி செயலாளா் பாண்டியன், நெக்ணாமலை ஊராட்சி செயலா் முனுசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT