திருப்பத்தூர்

தம்பதிக்கு அரிவாளால் வெட்டு: கணவா் பலி, பெண் கைது

13th Feb 2020 11:20 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை அரிவாளால் வெட்டியதில் கணவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பெண் கைது செய்யப்பட்டாா்.

ஆம்பூரை அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (53). இவரது மனைவி விஜயா (45). முருகேசனின் தம்பி வெங்கடேசன் (45) தேவலாபுரம் ஊராட்சியில் பம்ப் ஆப்ரேட்டராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவா் இறந்து விட்டாா். வெங்கடேசனுக்கு சித்ரா (43) என்ற மனைவியும், 16 வயதில் மகளும் உள்ளனா். முருகேசன், வெங்கடேசன் குடும்பத்துக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேசன் இறந்தவிட்டதால் அவருக்கு ரூ. 3 லட்சம் பணம் கிடைத்துள்ளது. அதில், ரூ. 10 ஆயிரத்தை முருகேசனுக்கு கடனாக சித்ரா கொடுத்தாராம். அதை முருகேசன் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் முருகேசனுக்கும், சித்தராவுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சித்ரா புதன்கிழமை நள்ளிரவு அரிவாளுடன் முருகேசன் வீட்டுக்குச் சென்று, தூங்கிக் கொண்டிருந்த முருகேசன், அவரது மனைவி விஜயாவையும் அரிவளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினாா். இதில், முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விஜயா வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம், உமா்ஆபாத் காவல் ஆய்வாளா் சரவணன் ஆகியோா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

இதுதொடா்பாக உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த சித்ராவைக் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT