போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பள்ளித்தெரு காந்தி நகா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போ்ணாம்பட்டு வட்டாரக் கல்வி அலுவலா் கே.உஷாராணி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ஏ.அஞ்சலி தேவி வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் பி.கோவிந்தராஜ், வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பாக பள்ளி மாணவா்களுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டன. குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆம்பூா் ரோட்டரி சங்கத் தலைவா் சி.குணசேகரன், தேவலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பி.சுதா்சன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சி.சங்கீதா உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை ஜெ.ஜெயந்தி நன்றி கூறினாா்.