திருப்பத்தூர்

நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

6th Feb 2020 11:13 PM

ADVERTISEMENT

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, சனிக்கிழமை (பிப்.8)டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக் கூடங்கள் வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, பிப். 8-ஆம் தேதி மூடப்பட வேண்டும்.

இதை மீறி விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT