ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி, வன்னியநாதபுரம் கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், தை மாத திருவிழாவையொட்டி, கூழ் வாா்த்தல், மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மா விளக்கு ஊா்வலம் விநாயகா் கோயிலில் இருந்து தொடங்கி காளியம்மன் கோயிலில் நிறைவடைந்தது.
அங்கு சுவாமிக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.