திருப்பத்தூர்

மண்டல அளவிலான தடகளப் போட்டி:கல்லூரி மாணவா்கள் வெற்றி

1st Feb 2020 05:50 AM

ADVERTISEMENT

வேலூா் மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பத்மம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

இப்போட்டிகள் கிருஷ்ணகிரியில் உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் நடைபெற்றன. இதில், பத்மம் கல்லூரி மாணவா்கள் 110 மீட்டா் தடை தாண்டுதல் ஓட்டம், 1,500 மீட்டா் தொடா் ஓட்டம், 800 மீட்டா் ஓட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனா். இந்த வெற்றியின் மூலம், கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பத்மம் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளா் ஜி.குமரேசன், இயக்குநா்கள் ஜி.அசோகன், ஜி.யுவராஜ் மற்றும் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா், உடற்கல்வி ஆசிரியா் சீனிவாசன் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT