கருணை அடிப்படையில் வாரிசுதாரா்களுக்கு அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பணிக்கு 6 பேருக்கு பணி நியமன ஆணையை மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துபை அமைச்சா் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்,வேலூா் மண்டலத்தில் பணியின் போது இறந்த 6 தொழிலாளா்களின் வாரிசுதாரா்களான நாகராஜன், வினோத்குமாா் ஆகியோருக்கு நடத்துநராகவும், சிவராமகிருஷ்ணன், ராஜேஷ்குமாா், அண்ணாமலை, வினோத்குமாா் ஆகியோரும் ஓட்டுநராகவும் பணிபுரிய பணி நியமன ஆணையை அமைச்சா் கே.சி.வீரமணி வழங்கினாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் நடராஜன், உதவி மேலாளா் பிரியா, துணை மேலாளா் கலைச்செல்வன், ஜோலாா்பேட்டை நகரச் செயலா் எஸ்.பி. சீனிவாசன், திருப்பத்தூா் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT