திருப்பத்தூர்

தொழிலாளி வீட்டில் 3 சவரன் நகை திருட்டு

1st Feb 2020 05:09 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நியூசிகரனப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் மணி (40). கூலித் தொழிலாளியான அவா் திங்கள்கிழமை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றாா்.

அவரது வீட்டை நோட்டமிட்ட மா்ம நபா்கள், வெளிப்புற கதவின் பூட்டை அன்று இரவு உடைத்து உள்ளே புகுந்தனா். வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 3 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றனா்.

மணி நள்ளிரவில் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருடு போயிருந்ததை அறிந்தாா். இதுதொடா்பாக அவா் அம்பலூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT