திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், அலுவலக மேலாளா் பாக்கியலட்சுமி, வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.