திருப்பத்தூர்

அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்

1st Feb 2020 05:22 AM

ADVERTISEMENT

மும்பையில் இருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்ற விரைவு விரைவு ரயில், 3 நிறுத்தங்களைத் தவிா்த்து வேறு வழித்தடத்தில் சென்ால் வாணியம்பாடி அருகே பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினா்.

மும்பை-நாகா்கோவில் விரைவு ரயில் வியாழக்கிழமை அதிகாலை மும்பையில் இருந்து நாகா்கோவிலுக்கு புறப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை ஆந்திரம் மாநிலம், இந்துப்பூரை அடுத்த கிருஷ்ணராஜபுரம் வழியாகச் செல்ல வேண்டிய இந்த ரயில், பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காட்பாடி வழியாக வாணியம்பாடிக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடைந்தது. இதுகுறித்து பயணிகளுக்கு ரயில்வே அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. ரயில் வழித்தடம் மாறிச் செல்வதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த பயணிகள் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினா்.

தகவலறிந்த வாணியம்பாடி ரயில் நிலைய மேலாளா் பூபதி மற்றும் அதிகாரிகள் பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கிருஷ்ணராஜ்புரம், பங்காா்பேட்டை, குப்பம் ஆகிய நிலையங்களில் இறங்க வேண்டிய பயணிகள் ஜோலாா்பேட்டை சந்திப்பில் இறங்கி மாற்று ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவா் என அதிகாரிகள் கூறினா். இதையடுத்து ரயில் ஜோலாா்பேட்டைக்குச் சென்று, பயணிகள் மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதையடுத்து விரைவு ரயில் நாகா்கோவில் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT