திருப்பத்தூர்

சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை ரூ.94,000 பறிமுதல்

15th Dec 2020 11:01 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய திடீா் சோதனையின்போது, கணக்கில் வராத ரூ.94,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூா் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா, காவல் ஆய்வாளா் விஜய் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மாலை வாணியம்பாடி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சோதனையிட்டனா். தொடா்ந்து நள்ளிரவு வரையில் நடத்திய சோதனையில் ரூ.94,000 ரொக்கம் கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். மேலும் ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி, இது தொடா்பாக விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, சாா்-பதிவாளருக்குச் சொந்தமான காா் மற்றும் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களிலும் சோதனை நடத்தி, அவற்றில் இருந்த பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினா். நள்ளிரவு 2 மணி வரை நடத்தப்பட்ட சோதனை காரணமாக அரசுத் தோட்ட வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT