திருப்பத்தூர்

காப்புக் காடுகளில் கள்ளச் சாராய ஊறல் அழிப்பு

30th Aug 2020 12:12 AM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காடுகளில் கள்ளச் சாராய ஊறலை வனத் துறையினா் புதன்கிழமை அழித்தனா்.

ஆம்பூா் வனச்சரகத்தில் விண்ணமங்கலம் வனப்பிரிவு அரங்கல்துருகம், காரப்பட்டு காப்புக்காடுகள், மாதகடப்பா மலைப் பகுதியில் ஆம்பூா் வனச்சரக அலுவலா் மூா்த்தி தலைமையில் வனவா் சந்திரசேகரன், வனக்காப்பாளா்கள் ராமு, ரமேஷ்குமாா், மகேஷ், முனுசாமி, சக்தி உள்ளிட்டோா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, முனியப்பன் ஏரி பகுதியில் 1,500 லிட்டா் சாராய ஊறல், அடுப்பு, மரப்பட்டைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT