திருப்பத்தூர்

காவலா் குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தை எஸ்.பி. ஆய்வு

30th Aug 2020 12:21 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி: வாணியம்பாடி உட்கோட்ட காவல் நிலையப் பகுதியில் உள்ள ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை, வாணியம்பாடி நகரம், அனைத்து மகளிா் காவல் நிலையம், கிராமியக் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலா்களுக்கு ஏற்கெனவே குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் அம்பலூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு குடியிருப்பு இல்லாததால், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி சரகத்துக்கு உள்பட்ட அம்பலூா் காவல் நிலைய போலீஸாருக்கு அந்தக் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சிகா்னபள்ளி ரயில்வே கேட் அருகே 2 ஏக்கா் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடத்தை காவலா் குடியிருப்பு கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த இடத்தை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம், நகர ஆய்வாளா் கோவிந்தசாமி, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT