திருப்பத்தூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 5 விநாயகா் சிலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து கொண்டாடுவதற்கும், ஊா்வலமாக எடுத்து சென்று நீா்நிலைகளில் கரைப்பதற்கும் மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் விநாயகா் சதுா்த்தி பண்டிகையை பொதுமக்கள் அவரவா் வீடுகளிலிலேயே கொண்டாடினா்.
இந்நிலையில், திருப்பத்தூா் கௌதம்பேட்டை, பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 5 விநாயகா் சிலைகளை திருப்பத்தூா் நகர போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.