ஆம்பூா் அருகே அபிகிரிப்பட்டரை கிராமப் பகுதியில் கானாற்று ஓடையின் குறுக்கே ரூ.26.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சிறுபால கட்டுமானப் பணியை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் வழக்குரைஞா் ஜி.ஏ.டில்லிபாபு, மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம்.மதியழகன், போ்ணாம்பட்டு ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.