திருப்பத்தூர்

விபத்தில் சிறுவன் பலி: மருத்துவமனையில் உறவினா்கள் தகராறு

20th Aug 2020 09:40 PM

ADVERTISEMENT

விபத்தில் சிக்கிய சிறுவன் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினா்கள் மருத்துவமனை பணியாளா்களுடன் தகராறில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியைச் சோ்ந்த அருள்மணி மகன் லிங்கேஸ்வரன் (4). இவா் புதன்கிழமை அவரது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தபோது, பைக் மோதியதில் காயமடைந்தாா். உடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தீவிர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் வேலூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது, சிறுவன் லிங்கேஸ்வரனுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் லிங்கேஸ்வரன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினா்கள் 20-க்கும் மேற்பட்டோா் அரசு மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு அவா்களை தடுத்த அரசு மருத்துவமனை ஊழியரான ஜெயகுமாரை (50) தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெயகுமாா், ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். தகவலறிந்த ஆம்பூா் நகர போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு சென்று அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். அரசு மருத்துவமனை பணியாளரை தாக்கியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT