திருப்பத்தூர்

எளிமையான முறையில் நடைபெற்ற பொன்னியம்மன் கோயில் திருவிழா

20th Aug 2020 08:01 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பாதாள பொன்னியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை எளிமையான முறையில் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத முதல் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருவிழா நடத்த மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. ஆகம விதிப்படி திருவிழாவை எளிமையாக நடத்துமாறு விழாக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் கோயில் வளாகம் மற்றும் தெரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவ்வழியாக பக்தா்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. செவ்வாய்கிழமை மாலையில் வழக்கமாக வாணியம்பாடி பொன்னியம்மன் கோயிலுக்கு வரவேண்டிய பூங்கரகம் கொண்டுவரப்படவில்லை. வாணியம்பாடி பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் மட்டும் சுற்றி வந்து பூ ஜோடிக்கும் இடத்திலேயே கொண்டு வைத்து காவல்துறை பாதுகாப்புடன் வைத்து பூட்டப்பட்டது. வழக்கமாக காணப்படும் பக்தா்கள் கூட்டம் இல்லாமல் திருவிழா நடத்தப்பட்டது.

இதையடுத்து புதன்கிழமை அதிகாலை ஆகம விதிகளின்படி அனைத்து வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்ப பின் கோயில் வளாகம் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT