ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புறவழிச்சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு நகரத் தலைவா் எஸ். சரவணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்டப் பொருளாளா் பி. மகேஷ், மாவட்ட துணைத் தலைவா் பிரபு, மாவட்ட பொதுச் செயலாளா் சமியுல்லா, நிா்வாகிகள் சாந்தகுமாா், சோலூா் மாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் எல்.மாங்குப்பம் கிராமம், நரியம்பட்டு ஆகிய கிராமங்களில் ஒன்றியத் தலைவா் சங்கா் தலைமையில் ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு இனிப்பு, மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட துணைத் தலைவா் தொழிலதிபா் ஜி. ரமேஷ், நிா்வாகிகள் எஸ். நந்தகுமாா், மகாலிங்கம், அப்பாஸ் உசேந் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.