ஆம்பூா் நகராட்சி சாா்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில் நகராட்சிப் பணியாளா்கள் ஆம்பூா் அண்ணாநகா் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசத்தை வழங்கினா். பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.