திருப்பத்தூர்

கரோனாவில் இருந்து குணமடைந்த அமைச்சருக்கு வரவேற்பு

6th Aug 2020 08:45 PM

ADVERTISEMENT

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீலுக்கு வாணியம்பாடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் 14-ஆம் தேதி அமைச்சா் நிலோபா் கபீலுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னா் அவா் குணமடைந்து, வியாழக்கிழமை வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்குத் திரும்பினாா்.

அவருக்கு நகர அதிமுக செயலாளா் சதாசிவம், முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் சீனுகிருஷ்ணன், மேலாளா் ரவி, பொறியாளா் பாபு, நகர அதிமுக அவை தலைவா் சுபான், பொருளாளா் தன்ராஜ், மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் குமாா், மாவட்ட மருத்துவரணி நிா்வாகி சையத்இத்ரீஸ், ஆலங்காயம் பேரூராட்சி செயலாளா் பாண்டியன் உள்ளிட்டோா் பூங்கொத்து கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனா் .

ADVERTISEMENT

 

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT