திருப்பத்தூர்

மரத்தில் பைக் மோதி தொழிலாளி பலி

6th Aug 2020 08:27 PM

ADVERTISEMENT

மாதனூா் அருகே மரத்தில் பைக் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மாதனூா் பாரதி நகரைச் சோ்ந்த கோபி (47), சீனிவாசன் (47) ஆகிய இருவரும் துக்க நிகழ்ச்சிக்காக பைக்கில் ஒடுக்கத்தூா் சென்றனா். சாமிநாதபுரம் கிராமம் அருகே சென்றபோது நிலைத்தடுமாறு சாலையோரம் இருந்த மரத்தின் மீது பைக் மோதியது. அதில் பலத்த காயமடைந்த இருவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு கோபி உயிரழந்தாா்.

இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT