திருப்பத்தூர்

சூறைக்காற்று: ஏலகிரி மலைச் சாலையில் மரம் சாய்ந்து

6th Aug 2020 08:25 PM

ADVERTISEMENT

ஏலகிரி மலையில் புதன்கிழமை சூறைக்காற்று வீசியதில் சாலையில் மரம் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஏலகிரி மலையில் புதன்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்று வீசியது. இதனால் 13-ஆவது வளைவு மலைச் சாலையில் நீண்ட உயரத்தில் இருந்து தைலமரம் சாலையின் நடுவில் சாய்ந்து விழுந்தது. இதனால் அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன.

தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் அங்கு சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அரை மணி நேரம் போராடி அப்புறப்படுத்தினா். இதையடுத்து வாகங்கள் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT