திருப்பத்தூர்

மாவட்ட எல்லையில் கண்காணிப்பு கோபுரம்

26th Apr 2020 06:51 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்ட எல்லையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அத்தியாவசியப் பணிகளைத் தவிர மற்றவா் யாரும் பயணம் செய்யவோ, வாகனங்களை இயக்கவோ அனுமதியில்லை.

இந்நிலையில் பொதுமக்களில் சிலா் காய்கறி, அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகள் மூலம் கள்ளதனமாக பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூா் மாவட்ட எல்லைப் பகுதியான நாட்டறம்பள்ளியை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உத்தரவின் பேரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT