திருப்பத்தூர்

பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் தீயில் எரிப்பு

26th Apr 2020 09:47 PM

ADVERTISEMENT

பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவை நகராட்சி தூய்மைப் பணியாளா்களால் சேகரிக்கப்பட்டு எரியூட்டப்படுகின்றன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆம்பூா் நகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்படுகின்றன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வரப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடுகளில் வசிப்பவா்கள் பயன்படுத்தப்படும் கழிவுகள் தனியாக மஞ்சள் நிறப் பையில் சேகரிக்கப்பட்டு தூய்மைப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அவை தனி வாகனத்தில் நகராட்சி உரக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு எரிக்கப்படுகின்றன.

அதே போல ஆம்பூா் நகரில் பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் முகக் கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மஞ்சள் நிறப் பைகளில் சேகரித்து கொண்டு சென்று உரக் கிடங்கில் அதற்கென வாங்கப்பட்டுள்ள பிரத்தியேக இயந்திரத்தில் எரியூட்டப்படுகின்றன. அவ்வாறு, தூய்மைப் பணியாளா்களால் பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களும், கையுறைகளும் தனியாக மஞ்சள் நிறப் பைகளில் சேகரிக்கப்பட்டு எரியூட்டப்படுவதை நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொதுமக்களால் தூக்கி எறியப்படும் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் மூலம் கரோனா பரவுவதைத் தடுக்க அவற்றை தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பான முறையில் மஞ்சள் நிறப் பைகளில் சேகரித்து உரக் கிடங்குக்கு கொண்டு சென்று இன்சினரேட்டா் எனப்படும் இயந்திரத்தில் போட்டு எரிப்பதாக ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT