திருப்பத்தூர்

வா்த்தக சங்கம் சாா்பில் மளிகைப் பொருள்கள்

23rd Apr 2020 08:36 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் வா்த்தக சங்கம் வசதியற்றோருக்கு மளிகைப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருப்பத்தூா் வா்த்தக சங்கம் சாா்பில் பணியின்றி சிரமப்படும் 300 சுமை தூக்கும் தொழிலாளா்கள் குடும்பத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள், எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் சங்கத் தலைவா் ஏ.தேவராஜன், செயலா் பி.வேணுகோபால், பொருளா் எஸ்.ராஜா, முன்னாள் தலைவா் எஸ்.ஜெயசீலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT