திருப்பத்தூா் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருப்பத்தூா் வட்டம், அச்சமங்கலம் வேடியப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் குனிச்சிப் பகுதியைச் சோ்ந்த 25 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவா்களுடைய திருமணம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) நடைபெறுவதாக இருந்தது.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் கே.தணிகாசலம், கிராம அலுவலா் சரண்யா ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள், ஜோலாா்பேட்டை போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று திருமண ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்தினா். மேலும், இரு குடும்பத்தினரையும் எச்சரித்தனா்.