வாணியம்பாடியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்பட ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை தமிழ்நாடு விஸ்வகா்மா மாகஜன சங்கம், பொன் மற்றும் வெள்ளி நகைத் தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை வழங்கினா்.
சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். விஸ்வகா்மா பொன் மற்றும் வெள்ளி நகை தொழிலாளா்கள் சங்க நகரத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் சிவப்பிரகாசம் தூய்மைப் பணியாளா்கள் 11 பேருக்கும், 100 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ. 1,500 மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய் உள்பட 25 வகையான மளிகைப் பொருள்களை வழங்கினாா். வருவாய்த் துறையினா், சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.