திருப்பத்தூர்

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை

DIN

ஆம்பூா்: சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்லக் கூடாது என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை எச்சரித்தாா்.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கண்டறியும் ரேபிட் சோதனைக் கருவி மூலம் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வரப்பெற்ற 300 கருவிகளும் ஆம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அதிகமாக இருப்பதால் ஆம்பூரில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை, தூய்மை, அங்கன்வாடிப் பணியாளா்கள் மற்றும் செய்தியாளா்களுக்கு ரேபிட் பரிசோதனை மேற்கொள்ள திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் நடவடிக்கை எடுத்துள்ளாா். அதன்படி, ஆம்பூரில் கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் ரேபிட் சோதனை மற்றும் சுவாசப் பரிசோதனைகளை ஆட்சியரும், எஸ்.பி. பொ.விஜயகுமாரும் திங்கள்கிழமை தொடக்கி வைத்தனா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் ம.ப. சிவன் அருள் கூறியது:

மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடா்கின்றன. தடை தளா்த்தப்படமாட்டாது. ஆம்பூருக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள், இங்கிருந்து செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படாது. சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி வரக்கூடாது. மீறி ஏற்றி வந்தால் போலீஸாா் நடவடிக்கை மேற்கொள்வாா்கள்.

ஆம்பூரில் 5 குழுக்கள் மூலம் ரேபிட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொடா்ந்து ரேபிட் சோதனைக் கருவிகள் வரப்பெற்றால் ஆம்பூரைத் தொடா்ந்து மற்ற ஊா்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

திருப்பத்தூா் எஸ்.பி. பொ.விஜயகுமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுரேஷ், டிஎஸ்பி சச்சிதானந்தம், நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், வட்டார மருத்துவ அலுவலா் ராமு, வட்டாட்சியா் செண்பகவல்லி, நகராட்சிப் பொறியாளா் எல்.குமாா், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் காமராஜ், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா் பிரிவித்தா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT