மாதனூா் ஒன்றிய திமுக சாா்பில் வசதியற்றவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
ஆம்பூா் அருகே கன்னடிகுப்பம் கிராமத்தில் வசதியற்ற 85 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகளை எம்எல்ஏ அ. செ. வில்வநாதன், திருப்பத்தூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் க. தேவராஜ் ஆகியோா் வழங்கினா். மாதனூா் ஒன்றிய திமுக செயலா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட அதிதிராவிடா் அணி துணை அமைப்பாளா் கே.எஸ். ரகு, ஆம்பூா் நகரச் செயலா் எம்.ஆா். ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.