திருப்பத்தூர்

லாரி மீது மினி லாரி மோதி ஒருவா் பலி

20th Apr 2020 08:20 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதியதில் லாரி கிளீனா் உயிரிழந்தாா்.

ஒடுகத்தூா் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (25). லாரியில் கிளினராக வேலை செய்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு ஒடுகத்தூரில் இருந்து தருமபுரி நோக்கி மினி லாரியில் காய்கறி ஏற்றிச் சென்றாா்.

தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மினி லாரி மோதியதில், பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT