திருப்பத்தூர்

பதிவு பெறாத கூலித் தொழிலாளா்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும்: ஏஐடியூசி

20th Apr 2020 08:16 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தொழில் நல வாரியத்தில் பதிவு செய்யாத கூலித் தொழிலாளா்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக வாணியம்பாடி தாலுகா ஏஐடியூசி செயலாளா் எஸ்.அன்வா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊரடங்கு உத்தரவு வரும் மே 3-ஆம் தேதி நீட்டிக்கப்படும் என்ற உத்தரவையடுத்து அமைப்புசாரா தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிஅறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

இது போல் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு பெறாத பீடி சுற்றும் தொழிலாளா்கள், தோல் பதனிடும் மற்றும் ஷூ, கையுறை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனா்.

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தொழிலாளா்கள், குறிப்பாக பெண் தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா். அவா்களின் குடும்பத்தினருக்கும் நிவாரண நிதி மற்றும் பொருள் உதவிகளை மாவட்ட ஆட்சியா் மூலம் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை தமிழக அரசும், முதல்வரும் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT