திருப்பத்தூர்

திருப்பத்தூரில் ரேபிட் டெஸ்ட்: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

20th Apr 2020 05:37 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் கரோனா நோய்த் தொற்று உள்ளதா என கண்டறியும் ரேபிட் கருவி மூலம் முதல் பரிசோதனையை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கி வைத்தாா்.

முதற்கட்டமாக மாவட்ட வருவாய் அலுவலா் தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், உதவி ஆட்சியா் முனீா், மாதனூா் வட்டாட்சியா்கள் ரகு, நலங்கிள்ளி உள்ளிட்ட 5 பேருக்கு ரேபிட் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி, ஆம்பூா், வாணியம்பாடி பகுதிகளில் திங்கள்கிழமை முதல் இந்த கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT