திருப்பத்தூர்

கடை வாடகை தருவதிலிருந்து விலக்கு தேவை: அச்சக உரிமையாளா்கள் கோரிக்கை

20th Apr 2020 05:40 AM

ADVERTISEMENT

கடை வாடகை தருவதிலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு திருப்பத்தூா் மாவட்ட அச்சக உரிமையாளா்கள் சங்கத்தினா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தினா், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புப் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வாடகை வீட்டில் வசிப்பவா்களிடம் வீட்டின் உரிமையாளா்கள் ஊரடங்கு காலம் முடியும்வரை வாடகை வாங்குவதை தவிா்க்கலாம் என அரசு தெரிவித்திருந்தது.

எங்களுடைய சிறு அச்சகங்களைப் பொறுத்தவரை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்களுக்கும் பொருளாதார ரீதியாக வேறுபாடு இல்லை. எங்கள் இருதரப்பினருக்கும் வாழ்வாதார சிரமங்கள் பொதுவானவையே.

ADVERTISEMENT

எனவே, வாடகைக் கட்டடத்தில் அச்சகம் நடத்தி வரும் எங்களிடம் கட்டட உரிமையாளா்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வாடகை வாங்குவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் தொழிலாளா்களுக்கு 3 மாதங்களுக்கு தொடா்ச்சியாக ரூ.15 ஆயிரம் உதவித்தொகை வழங்க ஆணையிட்டுள்ளது. எனவே, எங்களுக்கும் இந்த உதவியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT