திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 273 பைக்குகள் பறிமுதல்

7th Apr 2020 12:16 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா்: ஊரடங்கு உத்தரவை மீறி, திருப்பத்தூா் காவல் மாவட்டத்தில் அவசியமின்றி சுற்றித் திரிந்தோரின் 273 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை வாங்க வருபவா்களைத் தவிர, மற்றவா்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி வருபவா்களையும், பொதுமக்களின் நடமாட்டத்தையும் போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைகளில் தேவையின்றி சுற்றித்திரிந்த 273 பேரின் பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஜோலாா்பேட்டையில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அவசியமின்றி சுற்றித் திரிந்த 51 பேரின் இருசக்கர வாகனங்களும் இதில் அடங்கும்.

தேவையின்றி சுற்றித் திரிந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT