திருப்பத்தூர்

வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 3 பேருக்கு பரிசோதனை

5th Apr 2020 03:56 AM

ADVERTISEMENT

வெளிமாநிலத்தில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு திரும்பிய 3 பேருக்கு வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

ஜோலாா்பேட்டையில் உள்ள சோலையூா், சக்கர குப்பம், பஜனை கோயில் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 போ் மகாராஷ்டிரம், கா்நாடகம், ஹைதராபாத் பகுதிகளுக்கு லாரியில் சரக்கு ஏற்றிச் சென்றுவிட்டு கடந்த 31-ஆம் தேதி வீடு திரும்பினா். இதையறிந்த ஜோலாா்பேட்டை வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன், கிராம நிா்வாக அலுவலா் இந்திராணி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் அவா்களைக் கண்டறிந்து, சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அத்துறையினா், அந்த 3 பேரையும் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், மூவருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT