ஆம்பூா் வா்த்தக மையத்தில் தற்காலிக மருத்துவமனை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆம்பூா் வா்த்தக மையத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புக்காக தற்காலிக மருத்துவமனை அமைப்பதற்காக ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூா் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை சாா்பில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆம்பூா் அருகே ஜாமியா தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் 200 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
ஆம்பூா் வா்த்தக மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சிகிச்சைக்குத் தேவையான மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மருந்துகள் கொண்டு வரும் பணி தொடங்கியுள்ளது. இப்பணிகள் 2 நாள்களில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.