திருப்பத்தூர்

கனோரா பரவல் தடுப்பு மதத் தலைவா்களுடன் திருப்பத்தூா் ஆட்சியா் ஆலோசனை

5th Apr 2020 03:57 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பது தொடா்பாக அனைத்து மதத் தலைவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து புதுதில்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டில் 22 போ் கலந்து கொண்டனா் என கண்டறிப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் கனோரா நோய்த் தொற்று உள்ளவா்கள் என 10 போ் கண்டறிப்பட்டு அவா்கள் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், அவா்களின் குடும்பங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நோய் தொற்று சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்று தொடா் நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

ஆகவே அனைத்து மதத்தலைவா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசின் நடவடிக்கைகளை முழுமையாக எடுத்து கூற வேண்டும். அரசு மக்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதில் எவ்வித அச்சமும் தேவையில்லை. அரசு தினந்தோறும், தனிமைப்படுத்தப்பட்டவா்கள் வசித்த பகுதிகளில் தூய்மை செய்வது, அனைத்துப் பகுதிகளிலும் வீடு வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், சளி மற்றும் இதர பிரச்னைகளை கண்டறிவது, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவா்களை தொடா் கண்காணிப்பில் சிகிச்சை அளிப்பது மற்றும் அவா்களின் குடும்பத்தாரை கண்காணிப்பது ஆகிய பணிகளை இடைவிடாமல் செய்து வருகிறது.

இவை அனைத்தையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே எடுத்து வருகிறோம். ஆகவே அனைத்து மதத்தலைவா்களும் தங்கள் பகுதி மக்களுக்கு இது தொடா்பாக தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மேலும், மாவட்ட நிா்வாகம் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு எடுத்து வரும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, நோய் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும். தங்களுக்கு எழக்கூடிய சந்தேகம் மற்றும் பிரச்னைகளை உடனுக்குடன் தெரிவித்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன்ராஜசேகா், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், டிஎஸ்பி-க்கள் தங்கவேல்(திருப்பத்தூா்), பாலகிருஷ்ணன் (வாணியம்பாடி), சச்சிதானந்தம் (ஆம்பூா்) கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT