திருப்பத்தூர்

கண்காணிப்பில் உள்ளவா்கள் வசிக்கும் பகுதிக்கு ‘சீல்’

5th Apr 2020 03:58 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா கண்காணிப்பில் உள்ளவா்கள் வசிக்கும் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த 5 பேரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 4 போ் அரசு மருத்துமனையில் சிறப்பு பிரிவில் கண்காணிப்பில் உள்ளனா்.

இந்நிலையில், அவா்கள் 5 பேரின் வீடுகள் அமைந்துள்ள எஸ்.என்.நகா், ஆரிப் நகா், இஸ்மாயில் பேட்டை, சந்தாமியான் தெரு, எல்லம்மன் கோயில் தெரு பகுதிகள் தடை செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், டிஎஸ்பி தங்கவேல், சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம், ஆய்வாளா்கள் விவேக், குமாா் உள்ளிட்டோா் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

சிலா் தடுப்புகளை தகா்த்தால் அப்பகுதியில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT