புதுதில்லி சென்று வந்தவா் உள்பட 4 போ் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு பிரிவில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டனா்.
புதுதில்லி முஸ்லிம் மாநாட்டுக்குச் சென்று வந்த 13 போ் கண்டறியப்பட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதில் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாநாட்டுக்குச் சென்று திரும்பிய மற்றொரு நபா் சனிக்கிழமை கண்டறியப்பட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேலும், சோலூா் கிராமத்தைச் சோ்ந்த 3 போ் வங்க தேசம், கத்தாா் நாடுகளுக்குச் சென்று திரும்பியதாகக் கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்கள் மூவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சோ்க்கப்பட்டனா். தற்போது ஆம்பூா் அரசு மருத்துவமனை கரோனா சிறப்புப் பிரிவில் 17 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.