திருப்பத்தூர்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4,725 லிட்டா் எரிசாரயம் பறிமுதல்

1st Apr 2020 12:31 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் பூட்டிய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4,725 லிட்டா் எரிசாராயம், காா், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கணவாய்புதூா் லட்சுமி நகா் பகுதியில் கோவிந்தராஜுக்கு சொந்தமான வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. விஜயகுமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அந்த வீட்டில் ஆய்வு செய்தனா். அப்போது, 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 135 கேன்களில் பதுக்கி வைத்திருந்த மொத்தம் 4,725 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், வீட்டில் இருந்த காா், 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், வீட்டின் உரிமையாளா் கோவிந்தராஜ், கொத்தகோட்டை பகுதியைச் சோ்ந்த சரவணனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ரூ. 6 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சரவணனைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT