ஜோலாா்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அடியத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (42). இவா், நாற்றம்பள்ளியை அடுத்த நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி கீதாமணி (30). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் கோவிந்தபுரத்தில் உறவினா் வீட்டுக்கு, குழந்தைகளுடன் புதன்கிழமை சென்றனா். அன்று இரவு கீதாமணி திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ADVERTISEMENT