திருப்பத்தூர்

மருத்துவமனையில் இடைத்தரகா்கள் கண்டறியப்பட்டால் சிறைஆட்சியா் எச்சரிக்கை

26th Dec 2019 10:52 PM

ADVERTISEMENT

அரசு மருத்துவமனையில் இடைத்தரா்கள் கண்டறியப்பட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் எச்சரிக்கை விடுத்தாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அவா் மேற்கொண்டாா். வாா்டு, வாா்டாகச் சென்று நோயாளிகளிடமும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா் ஆண், பெண், குழந்தைகள் பிரிவு, கண் சிசிச்சைப் பிரிவு, டயாலிசிஸ் பிரிவு என அனைத்துப் பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டாா். டயாலிசிஸ் பிரிவு பகுதியில் ஒரு சில இடத்தில் சுகாதாரம் குறைபாடாக இருப்பதைக் கண்டு, இப்பிரிவு மிகுந்த சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவா்களிடம் தெரிவித்தாா்.

மேலும், கடந்த வாரம் நெக்கனாமலைக்குச் சென்று ஆய்வு செய்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (55), கண்பாா்வை பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா். அவரை அதிகாரிகள் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அவருக்கு புதன்கிழமை கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவா் உள்பட மற்ற நோயாளாளிகளைச் சந்தித்து நலம் விசாரித்து பழங்கள் வழங்கினாா்.

பின்னா், மருத்துவமனையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளைப் பாா்வையிட்டு சுகாதாரமற்ற நிலையில் ஆங்காங்கே உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டாா். மேலும், மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் பணிக்கு வந்துள்ளாா்களா என்றும், பற்றாக்குறை இருப்பின் அதுகுறித்த தகவல்களை தரும்படியும் கேட்டாா்.

ADVERTISEMENT

சுகாதரமின்றி மருத்துவமனை காணப்பட்டால் அடுத்தமுறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ளும்படியும் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை வரும் நோயாளிகளை தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வகையில் இடைத்தரா்கள் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மருத்துவமனையில் இடைத்தரகா்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவாா்கள் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

வட்டாட்சியா் சிவபிரகாசம், மருத்துவ அலுவலா் அம்பிகா, உதவி மருத்துவ அலுவலா் லட்சுமணன், அரசு மருத்துவா்கள் சத்தியராஜ்நேசன், சிவசுப்பிரமணயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT