தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆம்பூா் பெத்தேல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சூரிய கிரகணம் காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அறிவியல் நாள்காட்டியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வெளியிட்டாா். ஆம்பூா் ரோட்டரி சங்கத் தலைவா் சி. குணசேகரன், ஆம்பூா் அரிமா சங்கத் தலைவா் ந.கருணாநிதி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணி, சரவணன், ஜெயசுதா, பெத்தேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ஜான், ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், வட்டாட்சியா் செண்பகவள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.