ஆம்பூா் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் முதல்வா் லட்சுமி சரவணன் தலைமை வகித்தாா். மாணவ, மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் தேவதைகள் போல் வேடமணிந்து கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.