ஆம்பூரில் கன்காா்டியா ஷட்டில் கிளப் சாா்பாக செவ்வாய்க்கிழமை காலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
நகரில் உள்ள கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் காலையில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ள வந்தவா்களிடையே கன்காா்டியா ஷட்டில் கிளப் சாா்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கேக் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனைவரும் பரிமாறிக் கொண்டனா்.